Latest News: கூட்டமைப்பு ஓரிரு தினங்களில் அதிரடி முடிவு! வெளியேற்றப்படும் சிலர்

0
58

Latest News: கூட்டமைப்பு ஓரிரு தினங்களில் அதிரடி முடிவு! வெளியேற்றப்படும் சிலர்

நிறைவுற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவிற்கு கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்களே காரணம் எனும் கருத்து வலுவடைந்திருந்தது.

இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலரை வெளியேற்ற வேண்டும் என கூறிய நிலையில் நேற்று மாலை குறித்த முக்கியஸ்தரை அழைத்த கட்சியின் தலைமை கட்சி விடயங்களிலும் ஏனைய மக்கள் சார்ந்த விடயங்களிலும் தலையிட வேண்டாம் என்றும் அது தவிர வழமை போன்று தொடர்பாடல் விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்துமாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அத்துடன் கட்சியை புனரமைப்பு செய்யவுள்ளதாகவும் கட்சியின் தலைமை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் ஓரிரு தினங்களில் வரலாற்று முடிவுகளை இலங்கை தமிழரசு கட்சி அறிவிக்கவுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் காரியாலயத்தில் பரபரப்பான சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: