9 பெண்களை திருமணம் செய்து கொண்ட நபர்!

0
63

பிரித்தானியாவில் அதிகமுறை திருமணம் செய்து கொண்டவர் என கூறப்படும் Ron Sheppard(69), தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து தான் மீண்டு வந்துள்ளது எனக்கு நம்பிக்கை அளித்துள்ளது என கூறியுள்ளார்.

Ron Sheppard(69) என்ற பிரித்தானியர் இதுவரை 8 பெண்களை திருமணம் செய்து கொண்டார், இந்நிலையில் கடந்த ஆண்டு 27 வயதுடைய Cristel Lalec என்ற பெண்ணை ஒன்பதாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையே தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் இதுவரை திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன்.

என் மீது நம்பிக்கை வைத்தவர்கள் மீது நானும் நம்பிக்கை வைத்தேன், ஆனால் அவர்கள் என்னைவிட்டு வேறு ஒருவருடன் சென்றுவிட்டார்கள்.

இதற்கிடையில் என்னை புற்றுநோய் வேறு தாக்கிவிட்டது, இருப்பினும் எனது சமீபத்திய மனைவி என்னை அன்போடு கவனித்துக்கொண்டதாலும், எனக்கு இருந்த நம்பிக்கையினாலும் அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன்.

தற்போது திருமணம் செய்துகொண்டுள்ள ஒன்பதாவது மனைவி தான் இனிமே எனக்கு எல்லாமுமாக இருக்க போகிறார். அவர்தான் இனி எனது எதிர்காலம் என முடிவெடுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: