8 மற்றும் 10 வயது சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது

0
66

8 மற்றும் 10 வயது சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது

எட்டு மற்றும் பத்து வயதே நிரம்பிய தனது சொந்த மகள்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் 39 வயது மாது ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

லார்கின் என்ற பகுதியிலுள்ள மலிவுவிலைத் தங்கும் விடுதி ஒன்றில் இக்குற்றங்களை அப்பெண் புரிந்துள்ளதாக ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் கலில் காதீர் கூறினார்.

அந்தச் சிறுமிகளை இத்தகைய கொடுமைக்கு ஆளாக்கிய ஒவ்வொரு முறையும், மூன்று வங்காளதேச ஆடவர்களிடமிருந்து அப்பெண் 50 ரிங்கிட்டை கட்டணமாகப் பெற்று வந்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

அக்டோபர் 25-ஆம் தேதி தாமான் பிந்தாங் என்ற இடத்தில் அப்பெண் கைது செய்யப்பட்டார்.

அவரது இரு மகள்களும் சுல்தானா அமீனா மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் சமூக நல இலாகாவின் பாதுகாப்பில் வைக்கப்படுவர் என்று டத்தோ கலில் சொன்னார்.

குற்றவியல் சட்டம் 372 மற்றும் 376 ஆகிய பிரிவுகளின் கீழ் யைது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதன் தொடர்பில், அந்த மூன்று வங்காளதேசத்து ஆடவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: