70 கி.மீ தூரம் சடலத்தை இழுத்துச் சென்ற பேருந்து ஓட்டுநர் கைது!

0
99

70 கி.மீ தூரம் சடலத்தை இழுத்துச் சென்ற பேருந்து ஓட்டுநர் கைது!
தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் சென்ற பேருந்து ஒன்றில் சடலம் சிக்கியது அறியாமல் 70 கி.மீ தூரம் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் குன்னூரில் இருந்து பெங்களூருவுக்கு கர்நாடக அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. குறித்த பேருந்தை மொகினுதீன் (45) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

பெங்களூரு சாந்திநகர் டெப்போவை கடந்த சனிக்கிழமை அதிகாலை 2.35 மணிக்கு அடைந்ததும், பேருந்தை விட்டுவிட்டு ஓட்டுநர் மொகினுதீன் ஓய்வெடுக்க சென்றுள்ளார்.

அதன்பின்னர், பேருந்தை சுத்தப்படுத்த காலை 8 மணிக்கு ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். அப்போது, பேருந்தின் அடியில் சடலம் சிக்கியிருப்பதை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக அப்பகுதி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிசார் மொகினுதீனை கைது செய்துள்ளனர்.

பேருந்து சென்னப்பட்டனா பகுதியை அடைந்தபோது ‘தொப்’பென்று ஏதோ சத்தம் கேட்டது. உடனே இருபக்க கண்ணாடிகள் வழியே பார்த்தேன்.

எனக்கு எதுவும் தெரியவில்லை. அதனால் பேருந்து அடியில் கல் ஏதாவது பட்டிருக்கும் என்று நினைத்து தொடர்ந்து ஓட்டி வந்தேன் என்று குறித்த ஓட்டுநர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

உயிரிழந்தவருக்கு 30 முதல் 40-க்குள் வயதிருக்கும் என கூறும் பொலிசார் விக்டோரியா மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது எனவும், அனைத்து காவல் நிலையங்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: