7 வருட காதல் திருமண நாளில் காதலி தற்கொலை.

0
337

7 வருட காதல்… வேறு பெண்ணை மணந்த காதலன்.. திருமண நாளில் காதலி தற்கொலை.

காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் மனமுடைந்த இளம் பெண் தனது தற்கொலையை செல்பி வீடியோ எடுத்தது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்த 27 வயது பெண் தற்கொலை செய்து கொள்ளும் 3 நிமிட காட்சிகள் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.

பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்ட ரேவதி என்ற அந்தப் பெண் ஊத்துக்குளி மொரட்டுப்பாளையத்தில் வசித்து வந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள புகைப்பட நகல் எடுக்கும் கடையில் பணியாற்றினார். இவருக்கும் எம்பிஏ பட்டதாரியான நாகராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 7 ஆண்டுகள் இருவரும் பழகிவந்த நிலையில் நாகராஜ் திடீரென வேறு ஒரு பெண்ணை மணக்க முடிவு செய்ததாக தெரிகிறது.

இதனால் ரேவதிக்கும் நாகராஜிற்கும் இடையே கருத்து வேறுபாடும் அவ்வபோது சண்டைகளும் ஏற்பட்டது.

திருமணத்தை நிறுத்த மறுப்பு
இதனைத் தொடர்ந்து இருவரிடையேயும் மனமுறிவு ஏற்பட்டது. வேறு பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று ரேவதி நாகராஜை எச்சரித்துள்ளார்.

போலீசாரும் இது குறித்து கூறியபோது நாகராஜீடன் அடிக்கடி ரேவதி சண்டை போட்டுள்ளார், அவரின் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட திருமணத்தை நிறுத்திவிடும்படி கூறியுள்ளார், ஆனால் அதற்கு நாகராஜ் சம்மதிக்கவில்லை.

மனமுடைந்த காதலி
சொந்த வீடு இருந்தபோதிலும், ரேவதி தனது தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.. தற்கொலை செய்து கொள்ளும் முன்னர் ரேவதி தன்னுடைய தாயாரிடம் சொந்த வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

அதிர்ச்சி
ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் ரேவதியின் தாயாருக்கு சந்தேகம் வந்துள்ளது. வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

வைரலாகும் வீடியோ
ரேவதி தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து அவருடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் தனது காதலன் திருமணத்தால் மிகவும் மனமுடைந்துள்ளதாக ரேவதி பேசியிருந்தார். 3 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ பதிவு வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

காதலன் கைது
இஃப்கோ டோகியோ காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் ரேவதியின் காதலர் நாகராஜ். திருமணம் முடிந்த அடுத்த நாளே நாகராஜ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரேவதி தற்கொலை குறித்து அவருடைய தாயார் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: