5 வயது சிறுமியின் உடலை தோண்டி எடுக்க நீதி மன்றம் உத்தரவு.

0
52

5 வயது சிறுமியின் உடலை தோண்டி எடுக்க நீதி மன்றம் உத்தரவு.

மின்சாரத்தில் செயல்படக்கூடிய சாணைப் பிடிக்கும் இயந்திரத்தின் சுழல் வட்டு கழன்று சென்று நூர் அலியா ஷீவா என்ற ஐந்து வயது சிறுமியின் நெஞ்சில் பாய்ந்து அவரை பலிக் கொண்ட சம்பவம், அலட்சியம் காரணமாக நேர்ந்துள்ளது என்று போலீசார் கண்டறிந்துள்ளனர்.

தனது தந்தை புல்வெட்டும் இயந்திரத்தின் பிளேடை சாணைப் பிடித்துக் கொண்டிருந்த போது இயந்திரத்தின் சுழல் வட்டு கழன்று அந்தச் சிறுமியின் உயிரைப்பறித்தது. இதனைத் தொடர்ந்து, அடக்கம் செய்யப்பட்ட அந்தச் சிறுமியின் உடல்ஈப்போது மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, மறு பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று கெடா மாநில குற்றவியல் புலனாய்வுத் துறை தலைமைத் துணை ஆணையர் மியோர் பாரீட் சொன்னார்.

இதற்கு முன்பு, இச்சம்பவத்தை ‘திடீரென்று ஏற்பட்ட மரணம்’ என்று போலீசார் வகைப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அலட்சியப் போக்கினால் அந்தச் சிறுமிக்கு மரணம் நேர்ந்திருக்கலாம் என்ற அடிப்படையில், அச்சம்பவம் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப் படுகிறது என்று மியோர் பாரீட் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 304-ஆவது பிரிவின் கீழ், இச்சம்பவம் விசாரிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். அச்சிறுமியின் உடலை தோண்டி எடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவை போலீசார் பெற்றுள்ளதாக என்று மியோர் பாரீட் தெரிவித்தார்.

மின்சாரத்தில் செயல்படக்கூடிய அந்த சாணைப் பிடிக்கும் இயந்திரத்திலிருந்து கழன்று சென்ற அந்த சாணை வட்டு, நூர் அலியாவின் நெஞ்சைத் தாக்கியதும், அவளை உடனடியாக அருகிலிருந்து கிளினிக்கிற்கு அவளின் தந்தை தூக்கிச் சென்றார் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர், சுல்தானா பாஹியா மருத்துவ மனைக்கு அவள் கொண்டு செல்லப்பட்டாள்.

இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல், அவள் உயிரிழந்தாள். கம்போங் தஞ்சோங் பெசாரில் கடந்த சனிக்கிழமையன்று அவள் அடக்கம் செய்யப்பட்டாள் என்று குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: