5 நோயாளர்கள் கொழும்பிற்கு மாற்றம் கண்ணை இழக்கும் அபாயம்.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்.

0
66

5 நோயாளர்கள் கொழும்பிற்கு மாற்றம் கண்ணை இழக்கும் அபாயம்.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்.

யாழ். திருநெல்வேலிப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் செய்யப்பட்ட, கண்புரைப் பாதிப்புக்கான சத்திரசிகிச்சையால், தனது உறவினரின் கண் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதெனவும், அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், நேற்று (25) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ஒருவரின் உறவினர் ஒருவரே, இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற அவர், தனது முறைப்பாட்டை வழங்கினார். இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிஸார், தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த தனியார் வைத்தியசாலை ஒன்றில், கண்புரை நீக்கத்துக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது, கண்ணில் கிருமித் தொற்று ஏற்பட்டமையால் பாதிக்கப்பட்ட 9 பேரில் 5 பேர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு, நேற்று (25) இரவு மாற்றப்பட்டனர்.

குறித்த தனியார் வைத்தியசாலையில், கடந்த சனிக்கிழமை கண்புரை நீக்கி சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் கண்ணில் கிருமி தொற்று ஏற்பட்டமையால் பாதிக்கப்பட்ட நிலையில் 9 பேர், திங்கட்கிழமை இரவு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை நினைவுபடுத்தத்தக்கது.

இதேவேளை, ஒருமணித்தியாலத்தில் 10 நோயாளரிகளிற்கு சத்திரசிகிச்சை செய்து முடித்த வைத்திய நிபுணர்கள் தாம் கடமை புரியும் யாழ் போதனா வைத்தியசாலையில் நாள் ஒன்றிற்கு எத்தனை சத்திர சிகிச்சைகள் செய்கின்றார்கள் என்பதை தெரிவித்தால் புனிதமாக போற்றும் வைத்திய துறைக்கே அவமானம்.

முற்றுமுழுதாக பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றது இன்றைய வைத்திய துறை.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் வசதியானவர்கள் அல்ல. அண்றாடம் உழைத்து சாப்பிடும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே அதிகம்.

கடனை பட்டாவது வேளைக்கு இதை செய்து முடிப்போம் எனும் நோக்கிலேயே பெரும்பாலான மக்கள் தனியார் வைத்தியசாலைகளை நாடுகின்றனர்.

இதற்கு யாழ் போதனாவைத்தியசாலை நிர்வாக பீடமும் உடந்தையாக இருப்பது பாரிய வெக்கக்கேடு.

சகல வசதிகளும் இருந்தும் சத்திர சிகிச்சைகளை மட்டுப்படுத்தி சத்திர சிகிச்சைக்குரிய நாட்களை பின் தள்ளி நோயாளர்களை அலைய வைப்பதன் மூலமே தனியார் வைத்தியசாலைகளிற்கு நோயாளர்களை உள்வாங்க நிர்வாகமே வழிமுறை செய்கின்றது என்பது நிருபணமான உண்மை.

இதற்கு உதாரணமாக பல நோய்களை சுலபமாகவும் பக்கவிளைவுகள் இன்றியும் அறிந்துகொள்ளக்கூடிய MRI SCAN MECHINE ஒன்றை இலவசமாக வழங்குவதற்காக லண்டனை மையமாக கொண்டு இயங்கும் ஈழ தமிழர்களின் அமைப்பு ஒன்று முன்வந்துள்ளது. இதன் சராசரி விலை $150,000 – $300,000 ஆகும்.

இதனை ஏற்க வைத்தியசாலை நிர்வாகம் முற்றுமுழுதாக தடைவிதித்தது அப்பட்டமான உண்மை.காரணம் மிகவும் கொடுமையானது.

அதாவது, வைத்தியர்களையும், தனியார் வைத்தியசாலை, மற்றும் மருந்தகங்கள் போன்றவற்றை வாழவைக்கும் நோக்கிலேயே முற்றுமுழுதாக வைத்தியர் சங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளான வைத்திய நிபுணர்களின் பாரிய எதிர்ப்பினாலேயே வைத்தியசாலை நிர்வாகமும் இதனை முற்றாக நிராகரித்துவிட்டுள்ளது.

சாதாரணமாக ஒரு MRI SCAN செய்வதற்கு சுமார் 25 000 – 60 000 வரை வேண்டப்படுகின்றது.இதில் ஒரு பங்கு அதனை தீர்மானித்து அனுப்பும் வைத்தியரிற்கு சென்றடையும்.

அண்மையில் நோர்தேன் சென்ரர் வைத்தியசாலைக்குள் புகுந்த எமது நிருபர் வெளியிட்ட தகவல் ஒன்று சத்திரசிகிச்சைக்கு மயக்கமருந்தினை வளங்கும் வைத்திய நிபுணர் ஒருவரிற்கு வளங்கப்பட்ட சம்பளம் 22 லச்சம் ரூபா. ஆனால் இவர்கள் அரசவைத்தியசாலையில் பெற்றுக்கொண்டது வெறும் 130 000 ரூபா.இப்போது புரிகிறதா இவர்களின் மருத்துவ வியாபாரம்.

இதேவேளை, யாழ் போதனாவைத்தியசாலைக்குள் புகுந்துள்ள எமது பெண் நிருபரும் பல அதிர்ச்சியான தகவல்களையும் புகைப்படங்களையும் சேகரித்துள்ளார்.

அண்மையில், கர்ப்பிணி பெண் மற்றும் சிசுக்கள் பலியானமை தொடர்பான அண்மை தகவல்கள் எமக்கு ஆதார பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பாக அண்மையில் கொழும்பில் இருந்து வைத்தியசாலைக்குள் திடீரென புகுந்த முக்கிய அதிகாரிகளின் தேடுதலின் போது பல தவறுகள் சுட்டிக்கட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை, தங்கள் சுயநலனிற்காகவும் சுயமரியாதைக்காகவும் வைத்திய நிபுணர்கள் ஆடிய தில்லுமுல்லுக்களும் வெளியாகியுள்ளன.

மிகவும் நுணுக்கமாக வெளிநாடுகளின் தரத்தில் JICA நிறுவனத்தினால் மிகவும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட 3 மாடி கட்டிடம் யாவரும் அறிந்ததே.

இங்கு முதலாம் மாடியில் சத்திரசிகிச்சை கூடம் அமைந்துள்ளது. மிகவும் நேர்த்தியாக அதாவது சத்திர சிகிச்சை கூட விதிகளிற்கு அமைய இது அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது கர்ப்பிணி பெண்ணிற்கு சத்திர சிகிச்சை செய்வதற்கு ஒரு மூடிய அறையும், பிறந்த குழந்தையை உடனடி பராமரிப்பிற்கு ஏற்ப இன்னொரு இடமும் சகல வசதிகளுடனும் இது காணப்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் மகப்பேற்று சத்திர சிகிச்சைகள் எல்லம் இங்குதான் இடம்பெற்று வந்துள்ளது.இக்காலப்பகுதியில் இதுபோன்ற இறப்பு வீதங்கள் மிகமிக குறைவாகவே காணப்பட்டுள்ளன.

ஆனால் தங்கள் சுய நலனிற்காக இதனை பழைய சத்திர சிகிச்சை கூடத்திற்கு மாற்றியுள்ளார்கள்.

இச் சத்திர சிகிச்சை கூடமானது நியம விதிகளிற்கு ஏற்ப அமைந்திருக்காமை யாவரும் அறியாத உண்மை.

இங்கு போதுமான வசதிகள் எதுவும் இல்லாது (செய்யப்படாது) எல்லா விதமான நோயாளர்களும் மிக அருகருகாக வைத்து சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது அப்பட்டமான உண்மை.

இதற்கு இங்கு கடமையாற்றும் தாதியர்களும் உடந்தையாக இருப்பது மன்னிக்கமுடியாத குற்றம். ”பெண்நோயாளி காலை தூக்கி படுத்திருக்க அதை பார்த்து ஆண் நோயாளி வாயை பிழந்ததாம்” என வயது முதிர்ந்த ஒரு நோயாளி ஆதங்கப்பட்ட வாக்குமூலமும் எமக்கு கிடைத்துள்ளது.

ஒரு பெண் தனது உடலை கட்டிய கணவனிற்கு மட்டுமே காட்டுவாள் எனும் நிலை மாறி வைத்தியர்களிற்கும் காட்டவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு வந்த இக்காலத்தில் அதனை நீங்கள் சில காமக் கண்ணுள்ள மிருகங்களிற்கும் காட்ட நினைப்பதனை என்ன சொல்வது.

இதேவேளை, புதிதாக அமைக்கப்பட்ட சத்திர சிகிச்சை கூடத்தில் காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையே சத்திரசிகிச்சைகள் நடைபெறுவதாக தெரியவருகின்றது.

அப்படியானால் இரவு வேளைகளில் அங்குள்ள வளங்கள் திட்டமிட்டு வீணடிக்கப்படுகின்றனவா??

இதுதொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளரிற்கு நாம் சேகரித்த தகவல்களை ஆதார பூர்வமாக அனுப்பிவைப்போம். குறைகள் நிவர்த்திசெய்யப்படாதுவிடின் அவையும் சமூகத்திற்கு வெளிக்கொணரப்படும்.

நோர்தேன் சென்ரர் வைத்தியசாலை சத்திரசிகிச்சையில் அசமந்தம் ஆபத்தான நிலையில் நோயாளர்கள்!

நோர்தேன் சென்ரர் வைத்தியசாலையில் கண் புரை சத்திரசிகிச்சை மேற்கொண்ட 10 நோயாளர்களுக்கு கிருமி தொற்று ஏற்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளர்களுக்கான கண் புரை சத்திரசிகிச்சையினை அசண்டையீனமாக தவறான முறையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம் உட்பட மன்னர், வவுனியா பகுதியைச் சேர்ந்த 10 நோயாளர்கள் கண் புரை சத்திரசிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை யாழ்;. திருநெல்வேலியில் உள்ள நோர்தேன் சென்ரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மாலை 6 முணி முதல் 7 மணிவரை 10 நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சையினை கண் வைத்திய நிபுணர் மலரவன் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளார். இரவு 8.00 மணியளவில் சத்திரசிகிச்சை நிறைவடைந்ததுள்ளது.

இரவு 8 மணியின் பின்னர் நோயாளர்களை வீடு செல்லுமாறு வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை காலை கண் பரிசோதனைக்காக வருமாறு வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களின் நிலமை எவ்வாறு காணப்படுகின்றதென்றும் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு கேட்டுள்ளனர்.

சத்திரசிகிச்சை மேற்கொண்ட நோயாளர்களுக்கு நேற்று திங்கட்கிழமை (23.10) காய்ச்சலுடன் கண் திறக்கமுடியாமல் இருந்ததுள்;ளது. நோர்த்தேன் சென்ரல் வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளர்களை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆனாலும், கண் புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களுக்கு ஏன் காய்ச்சலுடன் கண் திறக்க முடியாமல் ஏற்பட்டது என்பது தொடர்பாக வைத்திய நிபுணர்களுக்கே தெரியவில்லை. பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மற்றும் நோயாளர்களின் உறவினர்கள் வைத்திய சாலை நிர்வாகி கேசவனுடம், கண் சத்திரசிகிச்சை நிபுணரிடமும் விளக்கம் கேட்டுள்ளனர்.

சரியான பதில்கள் தமக்கு தரவில்லை என்றும், காய்ச்சல் மற்றும் கண் திறக்கமுடியாமைக்கான காரணத்தினை இதுவரை கண்டறியவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஒரு கண்ணில் கண் புரை சத்திரை சிகிச்சை மேற்கொள்வதற்கு 65 ஆயிரம் ரூபா பணம் செலுத்தப்பட்டதாகவும், ஆனால், சத்திரசிகிச்சையினை சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

காய்ச்சல் மற்றும் கண் வீக்கத்துடன் திறக்கமுடியாமல் உள்ள ஏனைய மாவட்டத்தினைச் சேர்ந்த நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு 4 ஆயிரத்து 500 ருபா பணமும் கொண்டு வருமாறும் நோர்த்தேன் சென்ரல் வைத்தியசாலையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் சத்திரசிகிச்சை நிபுணர் மலரவனிடம் கேட்ட போது, கடந்த 5 வருடங்களாக தாம் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டு வருகின்றதாகவும், இந்த வருடம் தான் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளதென்றும், ஏன் இவ்வாறு ஏற்பட்டதென்றும் தெரியவில்லை என்று பதிலளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்கள் தற்போது 15 ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரிசோதனை செய்வதாக கூறுகின்றார்கள். என்ன பரிசோதனை என்பது பற்றியும் நோயாளர்களுக்கு இதுவரை தெரியப்படுத்தவும் இல்லை.

பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சையின் போது, தவறு என்ன நடந்ததென தெரியப்படுத்த வேண்டும். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் 65 ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்டு சத்திரசிகிச்சை மேற்கொண்ட நோயாளர்களுக்கு இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டதமைக்கு நிர்வாகம் உரியிநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன், சத்திரிசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர்களிற்கு மீண்டும் பார்வை வருவதற்கான நடவடிக்கையினை உடனடியாக வைத்தியர் மலரவன் முன்னெடுக்க வேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளதுடன், பணத்தினை மட்டும் இலக்காக பார்க்காமல் நோயாளர்களின் நலனில் அக்கறை கொண்டு உரிய சிகிச்சைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் நோயாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் சரி மருத்துவ சேவையில் தவறினை இழைக்காது உரிய முறையில் சத்திரசிகிச்சைகளை முன்னெடுக்குமாறும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: