33 பேருக்கு எய்ட்ஸ் பரவிய அதிர்ச்சி!ஒரே ஊசியால் வந்த வினை!

0
395

33 பேருக்கு எய்ட்ஸ் பரவிய அதிர்ச்சி!ஒரே ஊசியால் வந்த வினை!
உத்தர பிரதேசத்தில் உள்ள உன்னாவோ மாவட்டத்தில் குறிப்பிட்ட சில மாதங்களில் எச்.ஐ.வி பாதிப்பு அதிகமாக உள்ளது என எழுந்த புகார் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

இதற்காக இருநபர்கள் கொண்ட கமிட்டியை, பிரேம்கஞ்ச்,சாகிம்ர்புர் ஆய்வு மேற்கொள்ள உத்திர பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைத்தது.

இந்த கணிட்டியானது,566 பேரை கொண்டு பரிசோதனை செய்ததில்,அதிர்ச்சி தரும் தகவலாக தற்போது வரை மட்டுமே 33 பேர் எச்.ஐ.வி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.எப்படி இது சாத்தியம் என தீவிர சோதனையில் ஈடுபட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

செலவை குறைக்கும் விதமாக,அங்குள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் ராஜேந்திர குமார் என்பவர் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி ஊசி போட்டுள்ளார்.

ராஜேந்திர குமார் மருத்துவரும் இல்லையாம்.இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் கான்பூரில் உயர்சிகிச்சை எடுக்க பரிந்துரை செய்யப் பட்டு உள்ளது.இது தொடர்பான விசாரணையை அம்மாநில சுகாதாரத்துறை முடுக்கி உள்ளது

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: