20 மணி நேரம் வீடியோ கேம் விளையாடிய வாலிபருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.!

0
69

20 மணி நேரம் வீடியோ கேம் விளையாடிய வாலிபருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.!
சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தை சேர்ந்தவர் ஒரு வாலிபர். இவர் ஒரு பிரவுசிங் செண்டரில் வீடியோ கேம் விளையாட துவங்கினார்..

மாலையில் வீடியோ கேம் ஆட தொடங்கிய அந்த வாலிபர் மறுநாள் மதியம் வரை உணவு, நீர் எடுத்து கொள்ளாமல் கேம் ஆடியுள்ளார்.

பின்னர் சுயநினைவு இழந்து நாற்காலியில் மயங்கி விழுந்தார். கை, கால்கள் அசையாமல் இருந்த அந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது கோமா நிலையில் இருக்கும் அந்த வாலிபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் அந்த வாலிபர் போதை பொருள் எதுவும் உட்கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: