19 வயது இளைஞன் நஞ்சு அருந்தி தற்கொலை!

0
44

19 வயது இளைஞன் நஞ்சு அருந்தி தற்கொலை!

அம்பாறை, காரைதீவு பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது நிருபர் தெரிவித்தார்.

காரைதீவைச் சேர்ந்த பத்மநாதன் சதுரன் (19) என்ற இளைஞரே உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் இளைஞரின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர் 40 வயது நிரம்பிய பெண்ணொருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதனை அவரது பெற்றோர் கண்டித்து வந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன்காரணமாக அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா அல்லது பிறரால் நஞ்சூட்டப்பட்டாரா என்ற கோணங்களில் மேலதிக புலன் விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: