18 வயது இளம் பெண் தான் ஆண் என்று கூறி மூன்று பெண்களை திருமணம் செய்துள்ளார்.

0
110

18 வயது இளம் பெண் தான் ஆண் என்று கூறி மூன்று பெண்களை திருமணம் செய்துள்ளார்.

ஆந்திராவில் 18 வயது இளம் பெண் ஒருவர் தான் ஆண் என்று கூறி மூன்று பெண்களை திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் இருக்கும் இடிகலபாடு கிராமத்தை சேர்ந்தவர் ரமாதேவி(18).

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர் தான் ஒரு ஆண் என்று கூறி மூன்று பெண்களை திருமணம் செய்து மோசடி செய்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்த பொலிசார் அவர் குறித்து கூறுகையில், மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட நிர்மலா தான், ராமா தேவி மீது புகார் கொடுத்ததாகவும், அதன் பின்னர் அவரிடம் வந்து விசாரணை மேற்கொண்ட போது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்று ஆண் என்று கூறி ஆண் போல் வேஷம் போட்டு இரண்டு பெண்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்ததாகவும் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் திருமணம் முடிந்த உடன், தனக்கு அவசர வேலைகள் உள்ளதாகவும், விரைவில் சென்னையில் வீடு பார்த்துவிட்டு அதன் பின் உன்னை அங்கு அழைத்துச் சென்றுவிடுவேன் என்று கூறுவாராம், ஆனால் சென்னை சென்ற அவர் திரும்பி வருவதே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: