18 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை உயிரிழந்த தாய் நெஞ்சை உருக்கும் சம்பவம்!

0
126

இந்திய மாநிலம் கேரளாவில் திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்த இரட்டை குழந்தைகளை ஆசை தீர பார்க்கும் முன்னரே தாயார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் 42 வயதான சிசுபாலன், அவரது மனைவி ஷீபா.
இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தை வேண்டி தம்பதியினர் ஏறாத மருத்துவமனையும் இல்லை, ஏறாத கோவிலும் இல்லை.

இந்த நிலையில் ஷீபா கர்ப்பம் தரித்தார். கடந்த 1-ஆம் திகதி ஷீபாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தொடர்ந்து ஷீபா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுகபிரசவத்திற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்த பின்னர் ஷீபாவுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

ஆபரேசன் மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பிறந்தது, குடும்பத்தினர் சந்தோஷத்தில் ஆழ்ந்தனர்.இதனிடையே குழந்தைகளில் ஒன்று எடை குறைவாக இருப்பதாக கூறி சிறப்பு அறைக்கு மாற்றியுள்ளனர்.

அதனால் ஷீபா தமது இன்னொரு குழந்தைக்கு பாலூட்டி வந்துள்ளார், இந்த நிலையில் ஷீபா குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சுய நினைவை இழந்தார்.உடனடியாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி ஷீபா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஷீபாவின் உடல் ஈமச்சடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையிலும் குழந்தைகள் இருவரும் மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருந்து வருகிறது.இச்சம்பவம் ஷீபா மற்றும் அவரது கணவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: