16 வய­துக்­குட்­பட்ட சிறு­மியை கடத்­திச் சென்று துர்­ந­டத்­தைக்­குட்­ப­டுத்­திய நப­ருக்கு சிறைத்தண்டனை!!

1
65

16 வய­துக்­குட்­பட்ட சிறு­மியை கடத்­திச் சென்று துர்­ந­டத்­தைக்­குட்­ப­டுத்­திய நப­ருக்கு சிறைத்தண்டனை!!

16 வய­துக்­குட்­பட்ட சிறு­மியை கடத்­திச் சென்று துர்­ந­டத்­தைக்­குட்­ப­டுத்­திய நப­ருக்கு 5 ஆண்­டு­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்ட 2 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதித்து யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்தது.

“பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு 50 ஆயி­ரம் ரூபா இழப்­பீடு வழங்க வேண்­டும். அதனை வழங்­கத் தவ­றின் ஒரு ஆண்டு கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்க நேரி­டும். 4 குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­கு­மாக 8 ஆயி­ரம் ரூபா தண்­டம் செலுத்த வேண்­டும். அதைச் செலுத்­தத் தவ­றின் 4 மாதங்­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னையை அனு­ப­விப்­பீர்”- என்று யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் தீர்ப்­ப­ளித் தார்.

வட்­டுக்­கோட்­டை­யில் 2013 ஆம் ஆண்டு 16 வய­துக்­குட்­பட்ட சிறு­மியை அவ­ரது பாது­கா­வ­ல­ரின் (பெற்­றோர்) பொறுப்­பி­லி­ருந்து கவர்ந்து கடத்­திச் சென்று துர்­ந­டத்­தைக்கு உட்­ப­டுத்­தி­னார் என்று அதே இடத்­தைச் சேர்ந்­த­வ­ருக்கு எதி­ராக யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் சட்டமா அதி­ப­ரால் 4 குற்­றச்­சாட்­டுக்­கள் அடங்­கிய குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டது.

இந்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது. குற்­றப் பத்­தி­ரிகை எதி­ரிக்கு வாசித்­துக் காண்­பிக்­கப்­பட்­டது.

“எதிரி தனது குற்­றத்தை ஏற்­றுக்­கொள்­கின்­றார். அது தொடர்­பில் அவர் தற்­போது மனம் வருந்­து­கின்­றார். அவ­ருக்கு குறைந்­த­பட்ச தண்­ட­னையை வழங்கி இந்த மன்று விடு­விக்­க­வேண்­டும்” என்று எதிரி சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி மன்­றில் விண்­ணப்­பம் செய்­தார்.

அவ­ரது விண்­ணப்­பத்தை ஆராய்ந்த மேல் நீதி­மன்ற நீதி­பதி, தண்­ட­னைத் தீர்ப்பை அறி­வித்­தார்.

பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு இழப்­பீடு வழங்­கு­வ­தற்­கும் தண்­டப் பணம் செலுத்­து­வ­தற்­கு­மாக எதிர்­வ­ரும் நவம்­பர் 27ஆம் திக­தி­வரை கால நீடிப்பு வழங்கி வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: