13 வயது சிறுவன் செய்த காரியம்! கைது செய்த போலீஸ்!

0
107

13 வயது சிறுவன் செய்த காரியம்! கைது செய்த போலீஸ்!

கிராண்பாஸ் – ஸ்டேட்புர பிரதேசத்தில் வீடொன்றில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை திருடி, அதனை அடகு வைக்க முயற்சித்த 13 வயதான சிறுவனை கைது செய்துள்ளதாக கிராண்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதன் காரணமாக நீதிமன்றத்தினால் சிறுவர் சீர்த்திருத்த மையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சிறுவன் தங்கச் சங்கிலியை திருடி, அதனை பேலியகொடையில் உள்ள அடகு நிலையம் ஒன்றில் அடகு வைக்க சென்ற போது, அதன் ஊழியர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்தே சிறுவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: