12 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிப்பு!

0
74

12 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிப்பு!

மும்பை காட்கோபரை சேர்ந்தவர் ஷீத்தல். இவர் கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்தார். 24 வார கர்ப்ப காலத்தின்போது ஸ்கேன் பரிசோதனையில் அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் ஒட்டி வளர்வது தெரிய வந்தது. இருப்பினும் அந்த குழந்தையை பெற்றெடுக்க ஷீத்தல் மற்றும் அவரது கணவர் முடிவெடுத்தனர். இதன்படி கடந்த ஆண்டு பரேலில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷீத்தலுக்கு பிரசவம் ஆனது. அப்போது, அவர் வயிறு மற்றும் இடுப்பு பகுதி ஒட்டிய நிலையில் 2 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இதனையடுத்து ஒட்டிப்பிறந்த 2 குழந்தைகளையும் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க டாக்டர்கள் முடிவு செய்திருந்தனர். இதன்படி அந்த குழந்தைகள் பிறந்து ஒரு ஆண்டுக்கு பின் நேற்றுமுன்தினம் அந்த தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது.

மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை 20 டாக்டர்கள் குழுவினர் மேற்கொண்டனர். 12 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் 2 குழந்தைகளும் தனித்தனியாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாக அந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: