09 வயது சிறுமியை பொல்லால் தாக்கி காயப்படுத்திய தந்தை!!

0
44

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் 09 வயது சிறுமியை பொல்லால் தாக்கி காயப்படுத்திய தந்தையை நேற்று (14/10/2017) 8.00 மணியளவில் கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை ரொட்டவெவயைச் சேர்ந்த எம்.எச்.அஜ்மீர் (44வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

மதுபோதையில் வந்த தனது கணவர் 09 வயது மகளை பொல்லால் அடித்து நெற்றி மற்றும் முதுகுப்பக்கம் காயப்படுத்தியுள்ளதாக மனைவியால் மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காயங்களுக்குள்ளான சிறுமி மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தனர்.

இதேவேளை தாக்குதல் நடாத்திய தந்தையை கைது செய்துள்ளதாகவும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: