அதிர்ஷ்டவசமாக தப்பிய ஸ்பைஸ்ஜெட் விமானம்.!

1
101

அதிர்ஷ்டவசமாக தப்பிய ஸ்பைஸ்ஜெட் விமானம்.!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏவுகணை குண்டு வீசப்பட்டது. இந்த தாக்குதலில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஹமீதுஹர்சாய் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் நேற்று முன்தினம் ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டன. தலீபான் பயங்கரவாதிகள் ஏவுகணை குண்டுகள் வீசியதாக தகவல்கள் வெளியாகின. விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடைபெற்ற போது, காபூலில் இருந்து டெல்லிக்கு 180 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் 11.20 மணியளவில் புறப்பட தயாராக இருந்துள்ளது.

ஆனால், தாக்குதல் நிகழ்த்தப்பட்டதும், உடனடியாக விமானம் ரத்து செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் விமானத்திற்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இதனால், நூழிலையில் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தி தொடர்பாளரும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக ஆப்கான் விமான நிலையத்தை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணை குண்டுகள் அங்குள்ள வீடு ஒன்றின் மீது விழுந்ததில் 5 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ்-ஐ குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தலீபான் பயங்கரவாதிகள் தங்கள் இயக்கத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இருந்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வாரத்திற்கு ஐந்து விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இயக்குகிறது. ஏர் இந்தியா நிறுவனமும் வாரத்திற்கு நான்கு விமானங்களை காபூலுக்கு இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: