வெளியான அதிர்ச்சி தகவல் 3,400 இளைஞர்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம்!

0
109

இந்திய மாநிலம் பீஹாரில் கடந்த ஆண்டில் 3,400 இளைஞர்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது என்ற பகீர் தகவல் தெரியவந்துள்ளது.

பீஹார் மாநிலத்தில் இளைஞர்களை கடத்தி அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பது அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 3,405 பேர் கடத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக துப்பாக்கி முனையிலோ அல்லது குடும்பத்தினரை கொன்று விடுவோம் என மிரட்டியோ திருமணம் செய்து வைக்கின்றனர்.

சராசரியாக தினமும் 9 கட்டாய திருமணங்கள் நடைபெறுகின்றன என்ற பகீர் தகவல் சமூக ஆர்வலர்களால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பீஹாரில் மணமகளுக்கு அதிக அளவில் வரதட்சணை கேட்பது வழக்கமாக உள்ளது. இதிலிருந்து தப்பிப்பதற்காக பெண் வீட்டார் இதுபோன்ற செயலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞர்களை கடத்துவதற்காக, அவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களை பயன்படுத்துகின்றனர்.

சில நேரங்களில் கூலிப்படையினரையும் பயன்படுத்துகின்றனர் என பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிகின்றனர்.

கடந்த மாதம் தலைநகர் பாட்னாவை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால், மனைவியுடன் வாழ அவர் மறுத்துள்ளார்.

இதுதொடர்பான செய்தி தேசிய அளவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: