வெளியானது பிக்பாஸ் சீசன் 2 கமலின் இடத்தை பிடித்தது யார்? பங்குபற்றுபவர்கள் யார்!

0
93

வெளியானது பிக்பாஸ் சீசன் 2 கமலின் இடத்தை பிடித்தது யார்? பங்குபற்றுபவர்கள் யார்!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக சனிக்கிழமை முடிவடைந்தது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை ஆரவ், சினேகன், கணேஷ் மற்றும் ஹரிஷ் தான் இருந்தனர். இந்த நால்வரில் ஆரவ் பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 வருவதாகவும் அதில் பிரபல தொகுபபாளினி டிடி, மாப்பிள்ளை சீரியல் புகழ் ஸ்ரீஜா, தெய்வமகள் புகழ் கிருஷ்ணா, கலக்க போவது யாரு பாலா, தொடை அழகி நடிகை ரம்பா, சரவணன் மீனாட்சி புகழ் ரியோ கலந்து கொள்கின்றனர்.மேலும் ரச்சிதா, காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி, நடிகை சினேகா, கலக்க போவது யாரு கதிர், நடிகை ரியமிக்கா, மைனா நந்தினி, மற்றும் பிரபல வில்லன் ரியாஸ் இவர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியை நடிகர் சூர்யா தான் தொகுத்து வழங்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கமல் அரசியலில் சற்று பிஸி ஆகிவிட்டதால், இந்த நிகழ்ச்சி சூர்யாவிற்கு சென்றதாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் கொஞ்சம் படியுங்களேன்!

கைதிகளான ஐந்து பிக்பாஸ் பிரபலங்கள்

கைதிகளான ஐந்து பிக்பாஸ் பிரபலங்கள்
கைதிகளான ஐந்து பிக்பாஸ் பிரபலங்கள்

பிரபல முன்னணி தொலைக்காட்சியில் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பிரபலமாகி விட்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் படங்கள், விளம்பரங்கள், கடை திறப்பு, சிறப்பு விருந்தினர் என தொடர்ந்து பண மழையில் நனைந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது ஓவியா, ஜூலி, சினேகன், ரைசா, சுஜா ஆகியோரை வைத்து சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த பிரபல நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாம், அதற்காக இவர்களும் ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அந்நிறுவனம் இவர்களிடம் அதிரடியாக அக்ரீமெண்ட் ஒன்றை போட்டுள்ளதாம். அதில் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சி முடியும் வரை எக்காரணத்தை கொண்டும் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

இதற்காக இவர்களுக்கு பெரிய தொகையும் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்தி கசிந்துள்ளது, இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை, கலை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வந்தால் தான் எதுவும் உறுதியாகும்.

நிகழ்ச்சிக்கு கிழிந்த ஜீன்ஸ் அணிந்த ரம்யாவிற்கு நேர்ந்தது இது தான்..!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் ரம்யா. இவர் பல வருடமாக பல நிகழ்ச்சிகளை அந்த தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிக்கொண்டிருப்பவர். இவருக்கு சமீபத்தில் தான் திருமணமாகி விவாகரத்தும் நடந்து முடிந்தது.

வேலைக்காரன் படம் ரிலீஸானதை தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார் ரம்யா. அந்த நிகழ்ச்சிக்கு கிழிந்த ஜீன்ஸ்(பேஷன்) ஒன்றை அணிந்து சென்றுள்ளார் ரம்யா.

அப்போது, அந்த நிகழ்ச்சிக்கு போன் மூலம் தொடர்பு கொண்ட தீனா, ’படத்தின் டைட்டில் வேலைக்காரன் என்பதால் தொகுப்பாளராக வேலைக்காரியையே கூட்டி வந்துவிட்டீர்களா?’ என்று கிண்டல் செய்ய அரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது.

இதை தொடர்ந்து, ரோபோ ஷங்கரும், சிவகார்த்திகேயனும் கூட அவர் அணிந்து வந்த ஜீன்ஸை சுட்டிக்காட்டி சிரித்தனர். இதனால் ரம்யா கொஞ்சம் தரமசங்கடமாகவே காணப்பட்டார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: