வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் செய்த தகாத செயல்!!

0
246

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் செய்த தகாத செயல்!!

இலங்கையில் தங்கியிருக்கும் இரு வெளிநாட்டவர்கள் நுட்பமான முறையில் கொள்ளையில் ஈடுபட்டு வருதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல பகுதிகளிலுள்ள கடைகளுக்குள் நுழைந்து மிகவும் நுட்பமான முறையில் பணம் கொள்ளையடிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென் மாகாணத்தில் மிகப்பெரிய கடைகள் சிலவற்றிற்கு சென்ற குறித்த வெளிநாட்டவர்கள், 5000 ரூபாய் பணத்தை மாற்றி தருமாறு கோருகின்றனர். பணம் மாற்றும் நேரத்தில் அங்குள்ள பணத்தை கொள்ளையடித்து செல்வதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டவர்கள் இருவரும் பணத்தை திருடும் காட்சியும் அதனை தங்கள் காற்சட்டைபையில் போட்டு கொள்ளும் காட்சியும் சீ.சீ.டீ.வி கமராக்களில் சிக்கியுள்ளது.

மித்தெனிய நகரத்தில் அமைந்துள்ள கடை ஒன்றிற்கு வருகைத்தந்துள்ள இந்த வெளிநாட்டவர்கள் 5000 ரூபாய் பணத்தை மாற்றி தருமாறு கோரி 50000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடையின் ஊழியர்கள் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கடைக்கு சென்ற இந்த வெளிநாட்டவர்கள் அங்குள்ள கடையில் சில பொருட்களை கொள்வனவு செய்து விட்டு மிகவும் நுட்பமான முறையில் 40000 ரூபாய் கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொரவக்க நகரத்தில் உள்ள கடையிலும் இதேபோல் 40000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: