வெளிச்சத்திற்கு வந்த உண்மை 10 ஆண்டுகளுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை..!

0
56

வெளிச்சத்திற்கு வந்த உண்மை 10 ஆண்டுகளுக்கு முன்பு பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை..!
ணூகனடா நாட்டின் டொரண்டோவை சேர்ந்த பெண் ஒருவர் பிரபல நடிகையாக இருந்தார். இப்போது அவர் நடிப்பதில்லை. இவர் கடந்த 2008ம் ஆண்டு வின்சென்சோ பொனசா என்ற போலீஸ் அதிகாரியால் பாலத்காரம் செய்யப்பட்டார்.

ஆனால் அந்த போலீஸ் அதிகாரியின் மிரட்டல் காரணமாக இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்தார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகையே தற்போது போலீஸ் வேலையில் சேர்ந்துள்ளார். இதனால் தற்போது தைரியமாக தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனை தொடர்ந்து வின்சென்சோ கைது செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தான் பலாத்காரம் செய்யப்பட்ட சூழ்நிலை குறித்து நடிகை விளக்கி உள்ளார்.

அதன்படி கடந்த 2008ம் ஆண்டு தனக்கும் முன்னாள் காதலருக்கும் சண்டை ஏற்பட்டபோது உதவிக்கு இந்த போலீஸ் அதிகாரியை அழைத்துள்ளார். அவர் உதவிய பின்னர் நடிகையுடன் நட்பாகி உள்ளார்.

ஒரு நாள் நடிகையின் வீட்டிற்கு சென்ற போலீஸ் அதிகாரி அவரை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இதனை வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் தானே போலீஸ் அதிகாரி ஆனதால் இதனை தைரியமாக வெளியில் சொன்னேன் என்று கூறி உள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: