வெடித்தது சண்டை வீட்டை விட்டு வெளியேறும் ஐஸ்வர்யா ராய்!

0
313

பிரபல பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மாமியாருடன் ஏற்பட்ட சண்டையால் வீட்டை விட்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து, ஜல்சாவில் உள்ள அமிதாப்பின் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அனைவரது வீட்டிலும் நடக்கும் மாமியார் மருமகள் சண்டை போன்று, ஐஸ்வர்யா வீட்டிலும் சண்டை ஆரம்பித்துள்ளது. ஐஸ்வர்யாவிற்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் கடந்த சில மாதங்களாகவே சண்டை நடந்து வருவதாக செய்திகளும் வெளியாகிவந்தன.

அதற்கேற்றாற்போல ஐஸ்வர்யாவும், சில நாட்களுக்கு முன்பு மும்பையில் 21 கோடி ரூபாய்க்கு அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கினார். அங்கு குடும்பத்தோடு ஐஸ்வர்யா சென்று குடியேற உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதனை அமிதாப்பின் குடும்பம் மறுத்ததோடு வெறும் முதலீட்டுக்காக மட்டுமே அபார்ட்மெண்ட் வாங்கியதாக கூறினர்.

அபிஷேக் பச்சனுக்கு தன்னுடைய பெற்றோர் என்றால் கொள்ளை பிரியம் என்று அனைவருக்கும் தெரியும். ஐஸ்வர்யாவிற்கு முன்பு, கரிஷ்மா கபூருக்கும் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடைபெறவிருந்த நேரத்தில், தனிக்குடித்தனம் என கரிஷ்மா கூறியதாலே திருமணம் தடைபட்டது. இந்த ஒரு காரணத்தினாலே குடும்பம் பிரியாது என அனைவரும் நினைத்திருக்கையில், மீண்டும் ஒரு பெரிய செய்தி வெளியாகியுள்ளது. அதில், மாமியார் மருமகள் சண்டை முற்றிப்போன நேரத்தில், தற்போது நாத்தனார் ஸ்வேதாவுடனும் ஐஸ்வர்யா சண்டை போட்டுள்ளார். தொடர்ந்து நடைபெறும் சண்டையால் ஐஸ்வர்யா, தனது கணவர் மற்றும் மகள் ஆராத்யாவுடன் தனிக்குடித்தனம் செல்ல போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: