வெங்கட் பிரபு என்ன தப்பா யூஸ் பண்ணிட்டார் சொப்பன சுந்தரி நடிகையின் பளீர் பேட்டி!

0
84

வெங்கட் பிரபு என்ன தப்பா யூஸ் பண்ணிட்டார் சொப்பன சுந்தரி நடிகையின் பளீர் பேட்டி!

சொப்பண சுந்தரி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மனிஷா யாதவ் இயக்குனர் வெங்கட் பிரபு மீது புகார் தெரிவித்துள்ளார்.

வழக்கு எண் 18/9 படம் மூலம் நடிகையானவர் மனிஷா யாதவ். அவர் சென்னை 600028 II படத்தில் சொப்பண சுந்தரி பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அதில் இருந்து அவரை அனைவரும் சொப்பண சுந்தரி என்று அழைக்கிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து மனிஷா கூறியிருப்பதாவது,

சொப்பண சுந்தரி ஸ்பெஷலான பாடல் என்று மட்டும் தான் என்னிடம் கூறினார்கள். அது குத்துப்பாட்டு என்று யாருமே என்னிடம் தெரிவிக்கவில்லை.

மக்கள் என்னை சொப்பண சுந்தரி என்று அழைப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நான் பேசிய சில வசனங்கள் தவறாகிவிட்டது.

இது குத்துப்பாடலா என்று நான் கேட்டேன். குத்துப்பாட்டு என்று கூறாமல் என்னை ஆட வைத்தது பற்றி தெரிந்து என் இதயம் நொறுங்கிவிட்டது. வெங்கட் பிரபு சாருடன் நல்ல முறையில் பழகினேன். இந்த பாடல் படத்தின் பாதையை மாற்றும் முக்கிய பாடல் என்று மட்டுமே அவர் என்னிடம் கூறினார்.

நான் நடித்துள்ள ஒரு குப்பை கதை படத்தின் மீது நம்பிக்கை உள்ளது. வால்பாறையில் தேயிலை பறிக்கும் பெண்ணாக நடித்துள்ளேன். நாங்கள் ஒரு குப்பத்தில் ஷூட்டிங் நடத்தியபோது அங்கு வெள்ளம் ஏற்பட்டது. இதனால் படக்குழுவினருக்கு மலேரியா வந்தது. பல கஷ்டப்பட்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் மூலம் எனக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும் என்றார் மனிஷா.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: