வீட்டை வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! சுவர்களில் வந்த மிகவும் மோசமான துர்நாற்றம்!

0
172

அமெரிக்காவில் வீட்டை வாங்கிய பெண் ஒருவர் அந்த வீட்டில் மிகவும் மோசமான துருநாற்றம் வீசியதால், இதற்கு முன்னர் அங்கு வாழ்ந்தவர்கள் குறித்த தகவலை அறிந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Rio Vista பகுதியில் உள்ள சுமார் 36 ஏக்கர் பரப்பளவு கொண்ட வீட்டை Nellie Baldwin என்பவர் வங்கி மூலம் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வாங்கியுள்ளார்.

அதன் பின் வீட்டில் இருந்த ஒவ்வொரு சுவர்களிலும் மிகவும் மோசமான துர்நாற்றம் வீசியுள்ளது, அதுமட்டுமின்றி அந்த வீட்டில் இருந்த அனைத்து அறைகளும் பார்ப்பதற்கே கொடூரமாக இருந்துள்ளது.

இப்படி ஒரு மோசமான வாழ்க்கையை யார் வாழ்ந்திருப்பார் என்பது குறித்து அறிய வேண்டும் என்று Nellie Baldwin இது குறித்த தகவலை சேகரித்துள்ளார்.

அந்த தகவலை கேட்டறிந்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில் அவர் வாங்கிய வீட்டில் David மற்றும் Louise Turpin என்ற தம்பதியினர் வாழ்ந்து வாந்துள்ளனர்.

அவர்களுக்கு 13 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டிற்கு வெளியில் அனுப்பாமல் ஒரு வீட்டுச் சிறை போல் குறிப்பிட்ட அறையில் இருக்க வைத்துள்ளனர். இதனால் அவர்கள் மலம் கழித்தல் போன்ற செயல்களை அந்த அறைகளிலே செய்துள்ளனர்.

அவர்களை தொடர்ந்து டார்ச்சர் செய்து குளிக்க வைக்காமல் இருந்துள்ளனர். வருடத்திற்கு ஒரு முறை மட்டும் அவர்களை குளிக்க இவர்கள் அனுமதித்துள்ளனர்.

இப்படி தொடர்ந்து கொடுமை செய்து வந்த வேளையில் 17 வயது மகன் ஒருவன் அவர்களிடமிருந்து தப்பி, பொலிசாரிடம் சென்று நடந்தவற்றை எல்லாம் கூறியுள்ளான். அதன் பின் பொலிசார் அவர்களை கைது செய்து 37 பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்த தகவல் தற்போது அவருக்கு தெரியவந்துள்ளதால், இப்படியும் ஒரு குடும்பம் வாழ்ந்துள்ளதா என்று அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் அவர் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட வீடு பூட்டப்பட்ட நிலையில் கிடந்தது, இதனால் இதை கடந்த 2011-ஆம் ஆண்டு வங்கி மூலம் வாங்கினேன்.

நான் வீடு வாங்குவதற்கு முன் வீட்டை வந்து பார்க்கவில்லை, வங்கியும் தன்னிடம் வீடு வாங்கிய பின்னர் உடல் உபாதைகள் தொடர்பான பிரச்சனை வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று என்னிடம் கையெழுத்து வாங்கியிருந்தது.

நான் அதை பெரிதாக் எடுத்துக் கொள்ளவில்லை, வீட்டையும் வங்கி முடிந்த அளவிற்கு சுத்தம் செய்து தான் கொடுத்தது. இருந்த போதிலும் வீட்டின் உள்ளே சுவர்கள் மிகவும் மோசமாக துர்நாற்றம் வீசுகிறது, இதில் இருப்பதே மிகவும் கடினம். ஆனால் இதில் சித்ரவதைகள் அனுபவித்த பிள்ளைகளுக்காக நான் தற்போது கூட பிரார்த்தனை செய்து கொள்கிறேன், அவர்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சுவர்களில்
சுவர்களில்
மோசமான துர்நாற்றம்
மோசமான துர்நாற்றம்
அதிர்ச்சி தகவல்
அதிர்ச்சி தகவல்

இதையும் படியுங்கள்!

முகப் பருக்கள், கண் கருவளையம், கூந்தல் பராமரிப்பு மற்றும் பற்களில் உள்ள காரை என்பவற்றிற்கு முழுமையான தீர்வு!

முகப் பருக்கள், கண் கருவளையம், கூந்தல் பராமரிப்பு மற்றும் பற்களில் உள்ள காரை என்பவற்றிற்கு முழுமையான தீர்வு!

அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். எலுமிச்சைச் சாறு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். பார்லி பவுடர் சேர்ப்பதால் முகம் ‘ப்ளீச்’ செய்ததுபோல் பளிச்சென்று பிரகாசிக்கும்.

ஜுரம், தூக்கமின்மையால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்குகிறது எலுமிச்சை. 2 டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன், அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, இது கலக்கும் அளவுக்குப் பாலை விட்டு பேஸ்ட் ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கண்ணுக்குக் கீழ் பூசி, காய்ந்ததும் கழுவுங்கள். கருவளையத்தைப் போக்கி, நல்ல நிறத்தைத் தருவதுடன் சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் இந்த சிகிச்சைக்கு உண்டு.

கண் கருவளையம்
இளம் வயதிலேயே சிலருக்கு தோல் தொங்கி வயதான தோற்றத்தைத் தரும். இதற்கு அருமையான வைத்தியம் இருக்கிறது எலுமிச்சையில். தோல் சீவி, துருவிய உருளைக்கிழங்கு – அரை கப், எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன், சிவப்பு சந்தனம் – ஒரு டீஸ்பூன்.. இந்த மூன்றையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். முகத்தை ஒரு மெல்லிய மஸ்லின் துணியால் மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும்.

‘நேச்சுரல் ஃபேஸ் பேக்’ செய்யும் விதத்தைச் சொல்லட்டுமா?

எலுமிச்சை இலை – 4, பயத்தம்பருப்பு, தயிர் – தலா ஒரு டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – அரை டீஸ்பூன் (‘ஃபேஸ் பேக்’ போடுவது ஆணுக்கு எனில், கஸ்தூரி மஞ்சளுக்கு பதிலாக சந்தனத் தூள் – அரை டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்), இவற்றை நன்றாக அரைத்தால் கிடைப்பதுதான் ‘நேச்சுரல் ஃபேஸ் பேக்’. இதை முகத்துக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்துக் கழுவினால், அன்று மலர்ந்த தாமரை போல் முகம் ஜொலி ஜொலிக்கும்.

கூந்தலுக்கு அருமையான கண்டிஷனர் எலுமிச்சை!

2 எலுமிச்சம் பழங்களின் சாறில் 2 டீஸ்பூன் வெந்தயத்தை ஊற வையுங்கள். இதனுடன் கொட்டை நீக்கிய புங்கங்காயைச் சேர்த்து அரையுங்கள். இந்த விழுதை வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பட்டுப் போல மென்மையாகவும் சுத்தமாகவும் இருக்கும். தலையில் எண்ணெய் தடவினால், தலை முடி பிசுபிசுத்து, முகத்தில் எண்ணெய் வடிகிறதா? இந்தப் பிரச்னைக்கும் தீர்வு உண்டு எலுமிச்சையில்! ஒரு கை அளவு தேங்காய் எண்ணெயில் 2 துளி எலுமிச்சைச் சாறை குழைத்து தடவுங்கள். எண்ணெய் தேய்த்த தலை போலவே இருக்காது. கூந்தலும் பளபளப்படையும்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: