வீட்டு கூரையின் மீது குழந்தையின் தலை சந்திர கிரகணத்திற்காக குழந்தை நரபலி!

0
114

வீட்டு கூரையின் மீது குழந்தையின் தலை கண்டெடுக்கபட்டது. சந்திர கிரகணத்திற்காக குழந்தை நரபலி கொடுக்கபட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தெலுங்கானா மாநிலம் சில்கானா மாவட்டம் ஐதராபாத்தில் வீட்டு கூரை மீது 3 மாத குழந்தையின் தலைமட்டும் தனியாக கிடந்து உள்ளது. இது குறித்து போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்து உள்ளனர். போலீசார் வந்து பார்க்கும் போது கூர்மையான ஆயுதத்தால் குழந்தையின் தலை வெட்டபட்ட நிலையில் கூரை மீது வைக்கபட்டு உள்ளது. நேற்று முன் தினம் சந்திர கிரகணம் ஏற்பட்டது. அப்போது இந்த குழந்தை பலி கொடுப்பதற்காக தலையை வெட்டி கூரை மீது வைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து ரச்சகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தை ஆணா பெண்ணா என்பதை உறுதிபடுத்த முடியவில்லை. குழந்தையின் உடல் கிடைக்கவில்லை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: