வீட்டுப்பணிப்பெண்ணை கணவர் கற்பழித்ததாக மனைவி புகார்.

1
81

வீட்டுப்பணிப்பெண்ணை கணவர் கற்பழித்ததாக மனைவி புகார்.

தங்கள் வீட்டுப் பணிப்பெண்ணை தனது கணவன் அடித்து கொடுமைப் படுத்தியதோடு, அவரை கற்பழித்ததாகவும் அந்த ஆடவனின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், 45 வயது கணவன் கைது செய்யப்பட்டார்.

முறையான பயண ஆவணங்களைக் கொண்டிருக்காத குற்றத்திற்காக அந்த 33 வயது இந்தோனிசியப் பணிப்பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தங்களது வீட்டுப் பணிப்பெண்ணை தன் கணவன் கற்பழித்து வந்தததை அறிந்த அந்த ஆடவனின் மனைவி, தாது பற்றி விசாரித்த போது அவரது கணவனால் தாம் பலமுறை கற்பழிக்கப்பட்டதாக அப்பணிப்பெண் கூறியுள்ளார்.

அந்த இந்தோனிசியா பணிப்பெண்ணை தனது கணவன் பலமுறை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளதையும் அந்த ஆடவனின் மனைவி, போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக சுபாங் ஜெயா ஓசிபிடி துணை ஆணையர் முகமட் அஸ்லின் சடாரி கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, அந்தப் ஆடவனிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 30-ஆம் தேதி வரை அவர் காவலில் வைக்கப்படுவார் என்று அஸ்லின் மேலும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: