வீட்டில் மறைந்திருந்த பயங்கரமான மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0
126

வீட்டில் மறைந்திருந்த பயங்கரமான மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு குயின்லாந்தில் உள்ள வீடு ஒன்றின் பூச்செடிகளுக்கிடையில் மிகப் பயங்கரமான மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிகவும் நூதனமாகவும் தன்னை அடையாளம் தெரியாதவகையிலும் குறித்த மலைப்பாம்பு அந்த பூச்செடிகளுக்கு அருகில் இருந்துள்ளது.

பூச்செடி இருந்த நிலத்தின் நிறத்திற்கேற்ப தனது உடலை மாற்றியமைத்து சுருண்ட நிலையில் யாரும் கண்டுகொள்ளாதவகையில் குறித்த மலைப்பாம்பு காணப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளர்கள் குறித்த பாம்பு நின்ற இடத்திற்கு அருகில் தமது வாகனம் ஒன்றைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது திடீரென அதனை தமது கழுகுக் கண்களால் கண்ணுற்றனர் என சர்வதேச ஊடகமொன்று இதனை வர்ணித்துள்ளது.

பாம்பைப் பார்த்த வீட்டு உரிமையாளர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்ததோடு உடனடியாக பாம்பு பிடிப்பாளர்களைக் கொண்டு குறித்த பாம்பினை அகற்றியுள்ளனர்.

பயங்கரமான மலைப்பாம்பு
பயங்கரமான மலைப்பாம்பு

இரண்டரை அடி நீளமுடையதாகச் சொல்லப்படும் குறித்த பைதன் இன மலைப்பாம்பு அந்தப் பகுதியில் ஆரம்பத்திலிருந்தே தன்னை நூதனமாக மறைத்து வாழ்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. வளர்ந்ததும் தனது இரைக்காகவே குறித்த பூச்செடியிடையே மறைந்திருந்ததாக பாம்பு பிடிப்பாளர்களால் சொல்லப்பட்டுள்ளது.

பைதன் இனப் பாம்புகள் பொதுவாகவே அதிக பயங்கரமான மலைப்பாம்புகளாகும். மனிதர்களைக்கூட விட்டுவைக்காத மூர்க்கத்தனம் மிக்கதென்று பாம்பு ஆராய்ச்சியாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

வறண்ட நிலங்களிலேயே தனது வாழ்வை விரும்பி அமைத்துக்கொள்ளும் குறித்த பாம்பு தனது இரையை அதிரடி வேகத்தில் பிடித்து இரண்டொரு சுற்றில் இரைக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தி மரணிக்க வைத்துவிடும். பின்னர் இரையின் தலைப் பக்கத்திலிருந்து மெதுவாக விழுங்க ஆரம்பிக்கும்.

தென்கிழக்கு குயின்லாந்திலுள்ள நிலப்பரப்பு பைதன் போன்ற பாம்புகளுக்கு பொருத்தமான இடமென்று சொல்லப்பட்டுள்ள அதே நேரம் குறித்த இடத்தில் பழுப்பு நிறமுள்ள விஷப்பாம்புகளும் திடீர் திடீரென வெளிப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: