வீட்டில் இந்த நட்சத்திரத்தில் ஒருவர் இறந்துவிட்டால்! மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்தாம்!

0
311

வீட்டில் இந்த நட்சத்திரத்தில் ஒருவர் இறந்துவிட்டால்! மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்தாம்!

ஒருவருடைய வீட்டில் உள்ளவர்கள் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் 6 மாதம் அந்த வீட்டை பூட்டி வைக்க வேண்டுமாம்.

ஏனெனில் இறந்தவர்களின் ஆத்மா அந்த வீட்டை சுற்றி வருவதுடன், அந்த வீட்டில் உள்ளவர்களையும் தன்னுடன் அழைத்து சென்றுவிடும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.

எனவே மேற்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இறந்தால் அவர்களின் ஆத்மா மீண்டும் அந்த வீட்டிற்கு வராமல், மேலோகம் சென்று விடவேண்டும் என்பதற்காக வீட்டு கூரையை பிரித்து அதன் வழியாக பிணத்தை வெளியேற்றி சுடுகாட்டிற்கு கொண்டு செல்வார்களாம்.

சிலர் வீட்டுக்கு வரும் வாசல் மறக்க வேண்டும் என சொல்லி வீட்டு பின்பக்க சுவரை உடைத்து அதன் வழியே கொண்டு செல்வார்களாம்.

இதனால் தான் இறந்தவர்களுக்கு 16 ஆம் நாள் மந்திரம் சொல்லி கெட்ட சக்தியை வெளியேற்றுவதற்காக காரியம் செய்யப்படுகிறது.

எனினும் மேற்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இறந்தால் அந்த வீட்டை 6 மாதம் பூட்டி வைப்பது மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: