வீடியோ வந்தால் சஸ்பெண்டா கடுப்பாகும் காவலர்கள்!

0
100

வீடியோ வந்தால் சஸ்பெண்டா கடுப்பாகும் காவலர்கள்-சமீப காலமாக வாட்ஸ் அப்பில் காவலர்கள் பற்றிய வீடியோ வருவதும் உடனே அந்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதும் வாடிக்கையாகி விட்டது.

சாதரண காவலர்களாக அதிகாரிகளிடம் எனது கேள்விகள்.

என்றாவது வாகன சோதனை செய்யும் இடத்தில் நீங்கள் நின்றதுண்டா சார்.

சார் அத்தனை கேஸ் போடனும் இத்தனை கேஸ் போடனும் னு வாக்கி டாக்கி ல நீங்க சொல்றத ரெக்கார்ட் பண்ணி வாட்ஸ் அப்ல விடறதுக்கு எவ்வளவு நேரம் சார் ஆகும் எங்களுக்கு.

சார் ஒரு பத்து வண்டிக்கு எட்டு வண்டி நான் வக்கில் நான் கோர்ட்ல அலையறேன்.

நான் பத்திரிக்கை ஆபிஸ் ல போண்டா மடிச்சு கொடுக்கறேன் னு வரான் நாங்க பிடிச்சா உடனே நேரா அவன் உங்களுக்கு போன் அடிக்கறான் உங்க நம்பர் எங்ககிட்ட இருக்கோ இல்லையோ அவன்கிட்ட எப்படி சார் இருக்கு.

பல அதிகாரிகளோட சொந்தகாரங்க கோவிலுக்கு வராங்க கூட்டிட்டு போய் வா நேரா சாமிகிட்ட கொண்டு போ ஹை கோர்ட் அவங்க பக்கத்து வீடு னு நீங்க நல்ல பேரு வாங்க ஒரு ssi ரேங்க் ல இருக்க ஆள அனுப்பிறிங்க அதுவும் ஒரு வகை லஞ்சம் தான உங்க மீது யாரு நடவடிக்கை எடுக்கிறது?.

field ல எறங்கி வேலை பாருங்க சார் அப்போ தான் தெரியும் எங்க கஷ்டம் daily காவல்துறை பத்தி பேச 10% காவலர்கள் காரணம் னா மீதம்90%அதிகாரிங்க நீங்க பண்ற கெடுபிடியும் எப்படியாச்சும் கேஸ் பிடிக்கனும் ங்கற நிபந்தனையும் தான் சார் வீடியோ எடுக்கறவங்க என்னைக்காச்சும் முழுசா எடுத்துருக்கா அதிகாரி level ல இருக்க நீங்களே அதை தெரிஞ்சிக்கலனா அடிமட்ட அளவுல இருக்க மக்கள் எப்படி சார் புரிஞ்சிப்பாங்க?

எடுக்கிற வீடியோ எப்பவாச்சும் உண்மயா னு ஆராய்ந்தது உண்டா?

நீங்க அதிகாரி தானே நேர்மையா ஒவ்வொரு வாகன சோதனை அதிகாரிக்கும் கேமரா கொடுங்க வாகன சோதனை ஆரம்பிக்கற நேரத்துல இருந்து முடியற வரை சோதனைய பதிவு பண்ணணும் ஒரு நொடி கூட கேமரா ஆப்பாக கூடாது

கேமரா கவர் ஆகர இடத்துல மட்டும் தான் ஆவணம் சரிபார்ப்பதும் அபராதம் வசூல் பண்றதும் நடக்கனும்

வாகன சோதனை முடிஞ்ச பிறகு எக்காரணம் கொண்டும் அபராதமோ பணம் பற்றிய நடவடிக்கையோ இருக்க கூடாதுனு கண்டிசன் போடுங்க வக்கீல் அமைச்சர் எடுபிடி ன்னு வரவங்க நேரடியாக நீங்க வந்து ஆபிஸ்ல பாக்க சொலலுங்க.

பிரச்சினைக்குரிய இடத்துல பத்து ஆயுதப்படை அல்லது சிறப்புகாவல் படை காவலரோட வாகன சோதனை பண்ணுங்க அப்புறமா பாருங்க உண்மையான வாகன சோதனை நடக்கும் அதுல லஞ்ச புகார் வந்தா அந்த ஆளா சஸ்பெண்ட் பண்ணாதிங்க டிஸ்மிஸ் பண்ணுங்க. காவலனும் மனுசன் தான் சார் உங்க பதவிய காப்பாத்திக்க அடுத்தவன் வயித்துல அடிக்ஙாதிங்க அன்பார்ந்த அதிகாரிகளே !.

இப்படிக்கு அடிமட்ட காவலன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: