வீடியோவை எடுத்தவரே உண்மையான குற்றவாளி இண்டிகோ நிறுவனம்! பயணியின் நிலை என்ன?

0
143

வீடியோவை எடுத்தவரே உண்மையான குற்றவாளி இண்டிகோ நிறுவனம்! பயணியின் நிலை என்ன?

சென்னையில் இருந்து கடந்த மாதம் 15–ந் தேதி டெல்லி சென்ற இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் ராஜீவ் கட்டியால் என்ற பயணியும் இருந்தார். டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய அவர் பயணிகளை அழைத்து செல்லும் பஸ்க்காக காத்திருந்தார். அப்போது அவருக்கும் நிறுவன ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் வாக்குவாதம் ஏற்படவே, ராஜீவ் கட்டியாலை இண்டிகோ ஊழியர்கள் கடுமையாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செவ்வாய் கிழமை வீடியோ வெளியான பின்னரே இச்சம்பவம் வெளியே தெரியவந்தது. இருவருக்கும் சண்டை நேரிட்டதற்காக காரணம் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது. இண்டிகோ நிறுவன தலைவரும், இயக்குனருமான ஆதித்யா கோஷ், கட்டியாலிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதுடன், அவரை தாக்கிய ஊழியர்களையும் சஸ்பெண்டு செய்தார். மேலும் இதை வீடியோ படம் எடுத்த ஊழியரும் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சிவில் விமான போக்குவரத்து ஜெனரலுக்கு, மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி அசோக் கஜபதி ராஜு உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக அசோக் கஜபதி ராஜுவுக்கு விமான நிறுவனம் மன்னிப்பு கடிதம் எழுதியது. ‘நடந்த சம்பவத்தில் எங்கள் தரப்பில் தவறு இருப்பதை நான் முதலில் ஒப்புக்கொள்கிறேன். வருந்தத்தக்க இந்த சம்பவத்துக்கு மன்னிப்புக்கேட்பதுடன், இது தொடர்பாக நடவடிக்கையும் எடுத்துள்ளோம்’ என ஆதித்யா கோஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கட்டியாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜுபி தோமஸ் என்ற ஊழியர், தனது பணியையே செய்திருப்பதாக கூறியுள்ள ஆதித்யா கோஷ், அங்கு நடக்க இருந்த விபத்தில் இருந்த பயணிகளை காக்கவே அவர் சத்தமாக பேசியதாகவும், இதை கட்டியால் தவறாக புரிந்து கொண்டதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். இந்நிலையில் இச்சம்பவத்தில் புதிய திருப்பமாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் மோன்டு கல்ரா இச்சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்தவர்களில் ஒருவர், அவரே உண்மையான குற்றவாளி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: