விஷ ஊசி செலுத்தி 2 வயது குழந்தையை கொன்ற தாய் டைரியில் கண்ணீர் வார்த்தைகள்!

0
193

விஷ ஊசி செலுத்தி 2 வயது குழந்தையை கொன்ற தாய் டைரியில் கண்ணீர் வார்த்தைகள்!

தமிழகத்தில் குழந்தையை கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் டைரியில் எழுதி வைத்திருந்த வார்த்தைகள் கண்ணீர் வர வைத்துள்ளது.

சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கீதா(25). இவருக்கு ஸ்ரீதர்(35) என்ற கணவரும் ரோகித் என்ற 2 வயது மகனும் இருந்தனர்.

கீதா திருவல்லிக்கேனியில் உள்ள கால் செண்டரில் வேலை செய்து வந்த நிலையில், அவரது கணவர் ஸ்ரீதர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குடும்பப் பிரச்சனை காரணமாக, திருவண்ணாமலையில் உள்ள தனது தாயாரின் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் இறந்த துக்கத்தில் இருந்த கீதா சேத்துப்பட்டில் உள்ள தனது தாய், தந்தையுடன் வசித்து வந்தார். மிகவும் மன உளைச்சுடனே காணப்பட்ட அவர், தொடர்ந்து வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் திடீரென்று கடந்த 4-ஆம் திகதி காலை கீதா துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதற்கு முன்பு தனது 2 வயது மகன் ரோகித்தை விஷ ஊசிமூலம் கொன்றுவிட்டு இடது கை மணிக்கட்டில் கத்தியால் கீறிக்கொண்டு தானும் துப்பட்டாவால் துக்கிட்டுக்கொண்டார்.

இதைக் கண்ட உறவினர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் ரோகித் போகும் வழியிலே இறந்துவிட்டான்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த கீதாவிற்கு நினைவு திரும்பாமல் இருந்த நிலையில் தற்போது சிகிச்சை பலின்றி இறந்துவிட்டார்.

இதையடுத்து தற்கொலை செய்வதற்கு முன் கீதா தன்னுடைய டைரியில், தனது மகனை யாரும் கவனிக்கவில்லை எனவும் அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை எனவும் தான் சாக போவதாகவும் தன்னுடைய சாவிற்கு யாரும் காரணம் இல்லை என கண்ணீருடன் எழுதி வைத்துள்ளார்.

கணவரை இழந்ததால் தனிமையில் விடப்பட்ட கீதா குழந்தை மேல் உள்ள பாசத்தில் தற்கொலை முடிவை தேடியது அவர்கள் உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: