இருபத்தைந்து மணிநேரம் மட்டுமே பயிற்சி!! உங்களால் முடியுமா!! இந்திய சிறுவன் சாதனை!!

0
108

இருபத்தைந்து மணிநேரம் மட்டுமே பயிற்சி!! உங்களால் முடியுமா!! இந்திய சிறுவன் சாதனை!!

மன்சூர் அனீஸ் என்னும் 14 வயது சிறுவன் மத்திய கிழக்கு சார்ஜாவில் குடும்பத்துடன் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன்.
இந்த சிறுவனுக்கு விமானத்தை இயக்குவதில் ஆர்வம் இருந்துள்ளது. தற்போது ஒன்பதாம் தரத்தில் கல்வி பயின்றுவரும் இந்த சிறுவன் விமானமோட்டுவதில் புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளான்.

மன்சூர் அனீஸ்
மன்சூர் அனீஸ்

சிறுவனின் விமான ஓட்டும் ஆர்வத்தை பார்த்த அவனது உறவினரான இந்திய விமானி ஒருவர், அவனுக்கு விமான தொழில்நுட்பம் குறித்து விளக்கி 7 வயதாக இருக்கும்போது விமானிகள் பயிற்சி பெறும் செயற்கை விமான அமைப்பு மூலம் விமானம் இயக்குவது குறித்து பயிற்சி அளித்தார்.
பின்னர் தற்போது கனடாவில் உள்ள விமான பயிற்சி அகாடமியில் 25 மணி நேரம் பயிற்சி பெற்றான். பின்னர், கனடாவில் தன்னந்தனியாக விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளான்.

இதற்கு முதல் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 15 வயது சிறுவன் 35 மணி நேரம் பயிற்சி பெற்று தனியாக விமானம் இயக்கியதே இதுவரை சாதனையாக இருந்தது.
இந்த சாதனையை முறியடித்து 25 மணி நேரம் பயிற்சி பெற்ற 14 வயதான மன்சூர் அனீஸ் விமானம் ஒட்டியதன் மூலம் உலகின் மிக குறைந்த வயது விமானியாக விமான பயிற்சி அகாடமி தேர்வு செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: