விமானத்தில் நடிகர் விக்ரமிற்கு காத்திருந்த அதிர்ச்சி! சோகத்தில் மூழ்கிய தருணம்.!

0
121

விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படம் பொங்கலுக்கு ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு விக்ரம் பேட்டியளித்தார்.

விமானத்தில் சச்சின் டெண்டுல்கரை பார்த்தபோது நடந்த சம்பவம் குறித்து கவலையுடன் கருத்து வெளியிட்டுள்ளார்.

நான் மும்பையில் இருந்து சென்னை வர விமானத்தில் ஏறினேன். என் பக்கத்தில் இருந்த இருக்கையில் ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

சச்சினை பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோஷம். “ஓ மை காட் என்று மனதிற்குள் சொன்னேன்”. அவர் என்னை பார்த்து ஹாய் என்று சொன்னார். அவருக்கு நான் யார் என்பது தெரியவில்லை.

சச்சினுக்கு என்னை அடையாளம் தெரியாததால் வருத்தமாக இருந்தது. என்னை அடையாளம் தெரியாதது குறித்து சச்சினிடம் கேட்டேன்.

அதற்கு அவரோ நான் இந்திய படங்களை பார்ப்பது இல்லை. வெளிநாட்டு படங்களை எப்பொழுதாவது பார்ப்பேன் என்றார்.

நான் சச்சினுடன் இரண்டு மணிநேரம் விமானத்தில் பயணம் செய்தேன். பெரும்பாலும் எங்களின் மகன்கள் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம் என்று விக்ரம் கூறியுள்ளார். இந்த 2 மணித்தியாள பயணம் மறக்க முடியாத ஒன்று என்றும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: