வித்தியா கொலை வழக்கு சுவிஸ் குமார் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்!!

0
79

வித்தியா கொலை வழக்கு சுவிஸ் குமார் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்!!

மாணவி வித்தியா படுகொலையுடன் நேரடி தொடர்புடைய கொலையாளி சுவிஸ் குமார் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.

சுவிஸ்குமார் கொடூரமாக செயற்பட்டமையால், ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களையும் குற்றவாளிகளாக சொல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றங்கள் எங்கு வேண்டுமானாலும் நடக்கும், இவ்வாறான நிலையில் சுவிஸ்குமாரின் குற்றங்களை புலம்பெயர் தமிழர்கள் மீது போட முடியாது என பசில் குறிப்பிட்டுள்ளார்.

வார இறுதி சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே பசில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாணவி வித்தியா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்ட சுவிஸ்குமார் என்பவர் தொடர்பில் பல்வேறு கதைகள் பேசப்பட்டன.

அவர் புலம்பெயர் தமிழர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பதாகவும், மஹிந்த ராஜபக்ச ஆட்சியுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

எப்படியிருப்பினும் குற்றங்கள் என்பது நடக்க கூடும். தற்போது மாணவி வித்தியா கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சுவிஸ் நாட்டை சேர்ந்த சுவிஸ்குமார் என்ற ஒருவரும் உள்ளார்.

இந்த கொலையுடன் சுவிஸ் நாட்டவர் தொடர்புபட்டுள்ளார் என்பதற்காக ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களையும் குற்றம் சுமத்த முடியாது என பசில் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: