வித்தியா கொலைக் குற்றவாளிகளை போகம்பரை சிறைக்குள் வைத்து தாக்க முற்பட்ட ஏனைய கைதிகள்!! காரணம் இவர்கள் அவ்வளவு மோசமானவர்களாம்.

0
160

வித்தியா கொலைக் குற்றவாளிகளை போகம்பரை சிறைக்குள் வைத்து தாக்க முற்பட்ட ஏனைய கைதிகள்!! காரணம் இவர்கள் அவ்வளவு மோசமானவர்களாம்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்பான தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு கைதிகளையும் நேற்று 28 ஆம் திகதி மாலை தும்பறை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன்போது, கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு போன்ற குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய கைதிகள் வித்தியாவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு கைதிகளையும் தாக்குவதற்கு முற்பட்டுள்ளனர்.

18 வயதுடைய மாணவியை கொடூரமாக வன்புணர்வுக்குட்படுத்தி, கொலை செய்தார்கள் என அறிந்தே,

இவ்வாறு தாக்க முற்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த ஏழு பேரும் பலத்த பாதுகாப்புடன் C சிறைச்சாலை அறைக்குள்அடைக்கப்பட்டுள்ளனர்.

தும்பரை சிறைச்சாலையில் பாரிய குற்றச் செயல்களுக்காக மரண தண்டனை மற்றும் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 350 சிறைக்கைதிகள் உள்ளனர்.

இவர்களுக்கு குறித்த சிறைச்சாலையில் போதியளவு இடவசதிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: