விஜய்க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது.

0
935

விஜய்க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது.

புலி வெளியீட்டு விழாவில் டிஆர் பேசிய இது அடங்கா புலி அசரா புலி ஆவேச புலி என்று தொடங்கிய அடுக்குமொழி வைரலானது. ஆனால் அந்தப் பேச்சே பின்னர் விமர்சனத்துக்குள்ளானது, புலி சரியாக போகாத காரணத்தால். இந்த நிலையில் மெர்சல் பட ஆடியோ விழாவில் பார்த்திபன் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. அதேபோல அபிராமி ராமநாதன் மெர்சல் படத்துக்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று பேசியதும் சலசலப்பாகியிது.
ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து மாநில மொழி படங்களை சிறந்த வெளிநாட்டு படங்கள் வரிசையில் மட்டும்தான் அனுப்ப முடியும். சிறந்த நடிகர் கேட்டகிரிக்கு அனுப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. கூவுவதில் வல்லவரான பார்த்திபன் இந்த முறை ஓவராகவே கூவி விட்டார். மெர்சல் படம் 300கோடியைத் தாண்டி வசூலிக்கும் என்று அவர் சொன்னது விஜய்யையே நெளிய வைத்தது. மொத்தத்தில் விஜய் அமைதியாக இருந்தாலும், கூடியிருப்பவர்கள் ஏதாவது இப்படி குழப்பி விடுவது தொடர் கதையாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: