வாளுடன் நின்ற காவாலிகள் பொலிசாரால் கைது!!

0
45

வாளுடன் நின்ற காவாலிகள் பொலிசாரால் கைது!!

யாழ். போலிஸார் நேற்று இரவு 11 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் 4 இளைஞர்கள் வாள்களுடன் வீதியில் நின்றுள்ளனர்.

4 பேர்களிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அவர்களை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நால்வரும் யாழ்.மடத்தடி மற்றும் இராசாவின் தோட்டம் வீதிப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் நால்வரையும் விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக யாழ்.மாவட்டத்தில் வாள் வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: