வாகன விபத்தில் இளைஞர் பலி!! வேககட்டுப்பாட்டை இழந்தது மோட்டார் சைக்கிள்!!

0
63

வாகன விபத்தில் இளைஞர் பலி!! வேககட்டுப்பாட்டை இழந்தது மோட்டார் சைக்கிள்!!

யாழ்.பருத்தித்துறை பிரதான வீதியின் 17ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாடை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்தின் போது படுகாயமடைந்த 19 வயதான இளைஞர், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரழந்துள்ளார்.

இந்நிலையில், விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: