வவுனியாவில் வாகன விபத்தில் இளைஞர் படுகாயம்!

0
30

வவுனியா புகையிர வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்றைய தினம் காலை 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா குருமன்காட்டு சந்தியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த வான் வைரவப்புளியங்குளம் பகுதியில் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: