வயிற்றில் இருந்த குழந்தைக்கு நீதிமன்ற் நோட்டீஸ் அனுப்பிய தாய். நடந்த சுவாரஸ்யம்.

0
97

வயிற்றில் இருந்த குழந்தைக்கு நீதிமன்ற் நோட்டீஸ் அனுப்பிய தாய். நடந்த சுவாரஸ்யம்.

அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர், தன்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தையை உடனடியாக வெளியேறவேண்டும் என்று கோரும் நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பிய வினோத சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் யுத்தா மாநிலத்தை சேர்ந்தவர் கேய்லி பெய்ஸ், இங்குள்ள நீதிமன்றத்தில் பணிபுரிகிறார். ஏற்கனவே இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான கேய்லி பெய்ஸ், கடந்த 16-ஆம் தேதி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துவிடும் என எண்ணிய நிலையில், வலி நின்று போனது. மறுபடியும் பிரசவ வலி வரவே இல்லை, இதனால் உடனடியாக கர்ப்பத்திலிருந்து வெளியேறுமாறு குழந்தைக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தார்.

இதன்படி ‘கேய்லி பெய்ஸ்வின் கருவறையில் இருப்பவர்’ எனக் குறிப்பிட்டு நீதிபதி லின் டேவிஸ்சும் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை கேய்லி பெய்ஸ் தன்னுடைய குழந்தைக்கு படித்துக் காண்பித்துள்ளார்.

மூன்று நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பிய நிலையில் 12 மணிநேரத்தில் பிறந்துவிட்டதால், நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு என் குழந்தை ஆளாகவில்லை எனப் புன்னகைக்கிறார் கேய்லி பெய்ஸ்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: