வசூலில் ரஜினியின் கபாலியை முந்தியது அஜித்தின் விவேகம்.

0
806

வசூலில் ரஜினியின் கபாலியை முந்தியது அஜித்தின் விவேகம்.

நடிகர் அஜித் நடித்த விவேகம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று திரைக்கு வந்தது. இந்த படம் தொடர்பாக கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடிகர் அஜித் முன்றாவது முறையாக இணைந்து நடித்திருக்கும் விவேகம் படம் ஏற்கனவே முன்பதிவில் பாகுபலி சாதனையை முறியடித்திருந்தது. இண்டர்நேஷனல் ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

இதனையடுத்து விவேகம் திரைப்படம் தற்போது ரஜினியின் கபாலி சாதனையை முறியடித்துள்ளது. விவேகம் திரைப்படம் சென்னையில் மட்டும் முதல் நாளில் 1.21 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு முன்னர் கபாலி படம் 1.12 வசூல் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை விவேகம் முறியடித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: