ரூ.200 கோடி கருப்பு பணத்தை ஒப்படைத்த தொழில் அதிபர்!

0
65

ரூ.200 கோடி கருப்பு பணத்தை ஒப்படைத்த தொழில் அதிபர்!

புதுடெல்லி:- மத்திய அரசு சுகாதார திட்ட ஆஸ்பத்திரிகளுக்கு பெருமளவு மருந்துகளை சப்ளை செய்பவர்களில் ஒருவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, அவரிடம் ரூ.200 கோடி கருப்பு பணம் இருந்தது.

இந்நிலையில், அந்த பணத்தை அவர் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்து விட்டதாக அத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், அவர் மீதான வரி ஏய்ப்பு விசாரணை தொடரும் என்றும் அவர் கூறினார். டெல்லியை சேர்ந்த இந்த தொழில் அதிபர், டெல்லியில் ஒரு பெரிய வணிக வளாகத்தையும் கட்டி வருகிறார். அவரது வங்கி லாக்கர்களை திறக்கவும், ஆவணங்களை சோதனையிடவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: