ரயில் முன்பாய்ந்து காதலனுடன் தற்கொலை செய்து கொண்ட காதலி

0
67

பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் தர்மபுரி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ஒரு ஆணும், பெண்ணும் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த நிலையில் அதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்டது.

இரண்டு சடலங்களையும் மீட்ட பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்தார்கள். விசாரணையில், அந்த ஆண் மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த சோலைகுருசாமி (வயது 25) என்பதும், உடன் இறந்து கிடந்த பெண்ணின் பெயர் கவுசல்யா (17) என்பதும் தெரியவந்தது.

சோலகுருசாமியும், கவுசல்யாவும் காதலித்து வந்த நிலையில் அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து காதல் ஜோடி இருவரும் நேற்று காலையில் மதுரையிலிருந்து சென்னை செல்லும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: