ரயிலில் பயங்கரம்!!யாழில் இருந்து கொழும்பு வந்த ரயிலில் கொலை சம்பவம்!!

0
130

ரயிலில் பயங்கரம்!!ஓடும் ரயிலில் நடந்த மோதல் சம்பவமொன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இருவருக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இந்த மோதலின் போது ஒருவர் மற்றைய நபரை ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டுள்ளார்.

இவ்வாறு தள்ளிவிடப்பட்ட நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.ராகம ரயில் நிலையத்திற்கும் ஹொரப்பே ரயில் நிலையத்திற்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸ்ஸ நோக்கிப் பயணித்த ரயிலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த நபர் அடையாளம் காணப்படவில்லை எனவும், சுமார் 45 முதல் 50 வயது மதிக்கத் தக்கவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேதவறையில் வைக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த நபரை ரயிலிலிருந்து தள்ளிவிட்ட நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: