ரசிகர்களிடமிருந்து கண்ணீருடன் விடை பெற்றுக்கொண்டார் பாடகி எஸ். ஜானகி.

0
122

ரசிகர்களிடமிருந்து கண்ணீருடன் விடை பெற்றுக்கொண்டார் பாடகி எஸ். ஜானகி.

சினிமா, மேடைக் கச்சேரி அனைத்திலுமிருந்து ஓய்வு பெற்றதாக கண்ணீருடன் அறிவித்தார் இசையரசி எஸ்.ஜானகி. இந்திய சினிமாவில் மிக அதிகம் பாடிய பாடகிகளுள் ஒருவர் எஸ்.ஜானகி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

1952-இல் தொடங்கிய ஜானகியின் இசைப் பயணம் கடந்த ஆண்டு வரை தொடர்ந்தது. பல ‘குரல் வித்தகி’ ஆகத் திகழ்ந்தார். இவருக்கு இணையான இன்னொரு குரலைச் சொல்வது கடினம். அப்படியொரு இனிய, பாவமிக்க குரலுக்குச் சொந்தக்காரர் ஜானகி.

சில ஆண்டுகளுக்கு முன்பே ஜானகி திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துவிட்டார். மேடைக் கச்சேரிகளையும் குறைத்துக் கொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் எப்போதாவது தோன்றுவார்.

80 வயதை கடந்த ஜானகி தனது முதுமை காரணமாகவும் இளையவர்களுக்கு வழி விடுவதற்காகவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது எல்லோருக்குமே அதிர்ச்சிதான். இந்த நிலையில் மைசூரில் ஜானகியின் கச்சேரியை நடத்த தொழிலதிபர் மனுமேனன் ஏற்பாடு செய்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன் ஜானகி ஒப்புக்கொண்ட கச்சேரி இது.

இதைத் தொடர்ந்து நேற்று மைசூருமான கங்கோத்ரியிலுள்ள திறந்தவெளி அரங்கில் ஜானகியின் இசைக் கச்சேரி நடந்தது. சுமார் 4 மணிநேரம் இன்னிசை மழை பொழிந்தார். மிகவும் உணர்வுப்பூர்வமாக கண்ணீர் மல்க அவர் பாடல்களைப் பாடினார்.கன்னட திரையுலக நடிகர், நடிகைகள் என்று பலரும் இதில் பங்கேற்றனர்.

இறுதியில் கண்ணீருடன் விடை கொடுத்தார் ஜானகி. இதுதான் எனது கடைசி இசை நிகழ்ச்சி என்றும் இனி சினிமாவிலும் நான் பாடப் போவது இல்லை என்றும் அவஎ கண்கலங்கக் கூறிய போது ரசிகர்களில் பலரும் அழுத கட்சி நெஞ்சை நெகிழவைப்பதாக அமைந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: