யாழ் மணியம்தோட்டம் பகுதியில் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்

0
51

யாழ். மணியந்தோட்டம் சந்தியில், இன்று பிற்பகல் 3.15 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.காயமடைந்த, கொழும்புத்துறை ஒன்பதாம் குறுக்குத்தெரு உதயபுரத்தைச் சேர்ந்த 25 வயதான டொன் பொஸ்கோ றிச்மன் என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து, யாழ். போதனா வைத்தியசாலைப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரியாலை உதயபுரத்தைச் சேர்ந்த டொன் பொஸ்கோ றிச்மன், யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காட்சி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: