யாழ் பல்கலைகழக மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்!! கை கொடுக்குமா தமிழ்நாடு!!

0
74

யாழ் பல்கலைகழக மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்!! கை கொடுக்குமா தமிழ்நாடு!!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டமொன்றில் குதித்துள்ளனர்.

மாணவர்கள் சாகும்
மாணவர்கள் சாகும்

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்காத பட்சத்தில் தமது உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளைய தினம் அனுட்டிக்கப்படவுள்ள தீபாவளி தினத்தை கறுப்புத் தினமாக அனுட்டிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்காவில் நடைமுறையிலுள்ள மிகவும் கொடூரமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை முதல் பல்கலைக்கழக நுழைவாசலுக்கு முன்னால் இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை கறுப்பு தீபாவளி தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் ஆரம்பம்
போராட்டம் ஆரம்பம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, உடனடியாக சந்தித்து கலந்துரையாட அனுமதி கோரிய போதிலும் எதிர்வரும் வியாழக்கிழமை சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டமை கவலையளிப்பதாகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி உரிய தீர்வை வழங்காத பட்சத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது போராட்ட வடிவங்களை மாற்றியமைக்கவுள்ளதாகவும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் அனுரத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: