யாழில் மீண்டும் பரபரப்படையும் வித்தியா விவகாரம். விஜயகலா கைது செய்யப்படுவாரா?

0
94

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பாக எதிர்வரும் சனிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தீவக மக்களும் யாழ்ப்பாணம் பெண்கள் அமைப்புகளும் இணைந்தே இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்துள்ளனர். இது தொடர்பான சுவரொட்டிகள் சம்மந்தப்பட்டோரால் யாழ் நகரின் மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களான ஸ்ரான்லி வீதி, கே.கே.எஸ் வீதி, பலாலி வீதி மற்றும் திருநெல்வேலி அகிய இடங்களில் ஒட்டப்பட்டுக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகள் தப்பிக்க உதவியவர்களும் குற்றவாளிகளாவர், இவர்களும் தண்டிக்கப்படவேண்டும், வித்தியாவுக்கு முழுமையான நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளினை முன்வைத்தே குறித்த ஹர்த்தாலுக்கு அழப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதேவேளை மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட ஏழு பேருக்கு, நீதாய விளக்கத்தின் தீர்ப்பாயம் நேற்றைய தினம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

குற்றவாளிகளை தப்பிக்க விட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு முன்னாள் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரும் சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வருகிறார்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையிலேயே பூரண ஹர்த்தாலுக்கான இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: