யாழில் நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.காரணம் மாப்பிளை சினிமா பைத்தியமாம்!!

0
156

யாழில் நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.காரணம் மாப்பிளை சினிமா பைத்தியமாம்!!

மாப்பிளையின் சினிமாப் பைத்தியத்தால் கலியாணம் குழம்பிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

அரச உத்தியோத்தரான பெண் ஒருவருக்கும் தனியார் காப்புறுதி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கும் புறோக்கர் மூலம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.பெண்ணின் இரு சகோதரர்கள் புலம்பெயர் நாட்டில் திருமணம் முடித்து வாழ்கின்றார்கள். மாப்பிளையின் படத்தினை அனுப்புமாறு அவர்கள் கேட்ட போது மாப்பிளையின் பேஸ்புக் விபரம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மாப்பிளையின் பேஸ்புக்கைப் பார்த்த இரு சகோதரர்களும் இந்த மாப்பிளை வேண்டாம் என கடுமையான முறையில் தந்தைக்கு கூறியுள்ளனர். திருமண பதிவுத் திகதியும் நிச்சயிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு அவர்கள் கூறியதால் தந்தை கலக்கமடைந்துள்ளார்.

இதன் பின்னர் சகோதரர்களின் கடுமையான அழுத்தத்தால் திருமணம் நிறுத்தப்பட்டது. 

சகோதரர்கள் இவ்வாறு திருமணத்தை நிறுத்தியதற்கான காரணம் என்ன என தந்தை மற்றும் உறவுகள் விசாரித்த போது மாப்பிளை தனது முகப்புத்தகத்தில் ஒரு பிரபல தமிழ் நடிகரின் சினிமாப் பைத்தியமாக இருந்ததே காரணம் என தெரியவந்துள்ளது.மாப்பிளை குறித்த ஒரு நடிகரின் விசிறியாக தொழிற்பட்டு ஒவ்வொரு படங்கள் வரும் போது அதே போல் தானும் தனது முடிகள் தொடங்கி அனைத்து வடிவமைப்பையும் மாற்றி வந்துள்ளதுடன் ஏனைய நடிகர்களின் ரசிகர்களுடன் தூசணத்தில் சண்டை பிடித்துள்ளதையும் பெண்ணின் சகோதரர்கள் அவதானித்துள்ளனர்.முதல் முதலில் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான ஒரு வித்தியாசமான காரணத்துக்காக கலியாணம் குழம்பியது இதுவே முதற்தடவை என பலரும் தெரிவிக்கின்றனர். கலியாணம் குழம்பியதையடுத்து மாப்பிளை தனது முகப்புத்தகத்தை முடக்கி வைத்துள்ளதாக மாப்பிளையின் நண்பகள் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: