யாழில் திருமண வீட்டில் நடந்த பயங்கரம்!

0
98

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திருமண வீடொன்றில் தங்க நகைகள் மற்றும் பணம் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் புத்தூர், நிலாவரைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நேற்று அதிகாலை வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர் 12 பவுண் தங்க நகைகள், 14 இலட்சத்துக்கும் அதிகமான பணம் என்பவற்றை திருடியதாக தெரிவிக்கப்பட்டது.

போலி நகைகள் பிரிதாக எடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் சமையலறை யன்னல் உடைக்கப்பட்டே குறித்த நகைகள் திருடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்: